இமானுவேல் சேகரனின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டுராமநாதபுரம் பரமகுடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளகர்களை சந்தித்த அவர், தீண்டாமைக்கு எதிராக போராடியவர் இமானுவேல் சேகரனார். அவரது 62 வது நினைவு தினத்தில்எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர்1950 ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டு 1954 -ல்தீண்டாமை மாநாட்டை நடத்தி தீண்டாமை ஒழிக்க போரிட்டவர்என புகழாரம் சூட்டினார்.