condemns

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

சென்னை சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை துணை முதல்வர் ஓபிஎஸ் அறையில் யாகம் நடத்தியுள்ளார். விரைவில் அவர் முதலமைச்சராக வேண்டும் என்று அவர் யாகம் நடத்தினார் என பகிரங்கமாக குற்றம் சாட்டுவதாக முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

விழாவில் பேசிய ஸ்டாலின், எதற்காகஅந்த யாகத்தை நடத்தி இருக்கிறார் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. வேறொன்றுமில்லை முதலமைச்சர் பதவி காலியாக போகிறது. முதலமைச்சர் எடப்பாடி விரைவில் சிறைக்கு போகப் போகிறார். நிச்சயமாக எடப்பாடி சிறைக்கு சென்று விடுவார். அது ரொம்ப தாமதமாகிவிடும் இதை விரைவாக முடித்தால்தான் விரைவில் நான் முதலமைச்சராக போய் உட்கார முடியும். எனவேதான் அந்த யாகத்தை ஓபிஎஸ் நடத்தி இருக்கிறார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு நடத்தி இருக்கலாம் அல்லது அங்கு உள்ள கோப்புகளை எரிப்பதற்காக நடந்திருக்கலாம் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். கோட்டையில் யாகம் நடத்தியதற்குஓபிஎஸ் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றார்.