தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில்ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதேபோல் மக்கள் மற்றும் விவசாய பெருமக்களிடம் கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஒரு புதிய அரசாணையை வெளியிட்டு இருந்தது.

Stalin condemn to central government

Advertisment

இந்த புதிய அறிவிப்புடெல்டா விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல் நாளை கூட விருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே சட்டப்பேரவையில் அதிமுக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தாலும் எந்தக் கொள்கை முடிவுகளையும் அதிமுக அரசு எடுக்கவில்லை எனவே நாளை கூட்டப்படும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதிமுக அரசு தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதேபோல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கருத்து கேட்பு போன்றவை தேவையில்லை என்ற உத்தரவு கண்டனத்திற்கு உரியது எனவேஉடனடியாக பாஜக அரசு இந்த அறிவிப்பைதிரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.