தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும்ஸ்டாலினால்வெற்றிபெறமுடியாது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்என்ற மாயையில் ஸ்டாலின் உள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணி வலிமையான கூட்டணி. திமுகவை போல அதிமுககுடும்ப அரசியல் நடத்தவில்லை. என்ன செய்தார்கள் என திமுகவிடம் சொல்லச் சொன்னால் அவர்களால்சொல்ல முடியாது. யாரிடம் டூப் அடித்து வருகிறீர்கள். இது விஞ்ஞான உலகம். அதிமுகவையும், பிரதமரையும் குறைசொல்ல மட்டுமேதிமுகவிற்குதெரியும்'' என்றார்.