ADVERTISEMENT

தாங்கமுடியாத சோகத்தில், அவர் அழுத அந்தக் காட்சி இன்றைக்கும்... -ஸ்டாலின்

01:45 PM Feb 22, 2019 | kamalkumar

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ஸ்டாலின், இவ்வாறு கூறினார்...

ADVERTISEMENT


ADVERTISEMENT


ஒரு வயது அவரைவிட நான் குறைவானவனாக இருந்தாலும் அவர் என்னை அண்ணன் என்றுதான் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருப்பவர். அதைவிட தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த பாசமும், அன்பும், ஏன் பக்தியும் கொண்டிருந்தார் என்று சொன்னாலும் அது மிகையாகாது. கலைஞரின் மறைவு செய்தி கேட்ட நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்தார். வெளிநாட்டிலிருந்து வீடியோ மூலம் இரங்கல் செய்தியை சொல்லுகிறபோது, தாங்கமுடியாத அளவிற்கு சோகத்தில் மூழ்கி அவர் அழுத அந்தக் காட்சி இன்றைக்கும் நம் மனதிலே நிழலாடிக்கொண்டிருக்கிறது. தலைவர் மறைவெய்திய பிறகு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலையில், அதற்கு பிறகு சிகிச்சை முடிந்து இந்தியா வந்தபிறகு, விமானநிலையத்திலிருந்து நேராக தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி உள்ளபடியே அவர் கலைஞர் இடத்திலே எந்த அளவிற்கு பக்தி வைத்திருந்தார் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும். அவர் நல்ல முறையிலே தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்து நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும். பணியாற்றிட வேண்டும். என்று என் வாழ்த்துகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை. உடல்நலத்தை பற்றி விசாரிப்பதற்காக ஒரு மனிதாபிமான உணர்வோடு நான் அவரை சந்தித்தேனே தவிர, நீங்கள் எதிர்பார்ப்பதைபோல அந்த சந்திப்பு நிகழவில்லை. உங்களின் நல்ல எண்ணத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள் நன்றி...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT