திமுக தலைவர் ஸ்டாலின் ஜமீன்கொரட்டூர் என்னும் பகுதியில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பேசியது. பயத்தின் காரணமாகவே பாஜகவுடன் அதிமுக சேர்ந்துள்ளது. பாஜகவுடன் சேரக்கூடாது என்று கூறியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரணாக அதிமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது. முதல்வர் பழனிசாமி மீத் விரைவில் கொலை வழக்கு பதிவாக உள்ளது. அதிமுகவின் கதை என்று ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றிபெறும் என்று திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.