ADVERTISEMENT

’படித்த இளைஞர்கள் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்’-ஊராட்சி சபை கூட்டத்தில் எம்.எல்‌.ஏ.சக்கரபாணி!! 

10:06 PM Jan 13, 2019 | sakthivel.m

ADVERTISEMENT


மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT


அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர்களும் அந்தந்த பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்
.

அது போல் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வும். மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி லக்கையன் கோட்டையில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினார். இந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு பொது மக்களோடு விவசாயிகளும் கட்சி பாகுபாடு பார்க்காமல் பெருந்திரளாக கலந்துகொண்டு எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை, லைட், கழிப்பறை போன்ற எந்த ஒரு அடிப்படையும் சரி வர இல்லை. எங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் நீங்கள் தான் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த மனுக்களை எல்லாம் சக்கரபாணி யிடம் கொடுத்தனர் . அதுபோல் நீங்கள் வாங்கிக் கொடுத்த முதியோர் உதவித் தொகையும் கடந்த சில வருடங்களாகவே நிறுத்திவிட்டனர் எனக்கூறி 20க்கும் மேற்பட்ட முதியோர்களும் அந்த உதவித்தொகையை வாங்கி கொடுக்க கோரியும் மனு கொடுத்தனர். அதை எல்லாம் பெற்றுக்கொண்ட சக்கரபாணியோ‌.... உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால் அந்தந்த பகுதியில் உள்ள தலைவரிடமும் வார்டு நெமாபர்கள் மூலமும் உங்கள் குறைகளை சொல்லி நிவர்த்தி செய்து இருக்கலாம் அதனாலதான் தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை நடத்த சொல்லி வலியுறுத்தி வருகிறார். அப்படி இருந்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்த அரசு முன்வரவில்லை என்பதால் தான் ஊராட்சி சபை கூட்டத்தை போட்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தலைவர் சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் நாங்கள் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம் தற்பொழுது நீங்கள் கொடுக்கப்பட்ட மனுக்களை எல்லாம் நானே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி அதை நிவர்த்தி செய்கிறேன்.


கஜா புயலால் தொகுதியில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. அப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் படித்த இளைஞர்கள் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதை மாநில அரசு கண்டு கொள்ளலாமல் கமிஷன் கரப்ஷன் ஆட்சியை தான் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க வரும் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் . அதன் மூலம் தான் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அதன் பின் தளபதி முதல்வராக வருவார். அதன் பின் உள்ளாட்சித் தேர்தலும் நடக்கும் அதன் மூலம் உங்கள் கோரிக்கைகளும், குறைகளும் முழுமையாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தவாரே ஊராட்சி சபை கூட்டத்தை நிறைவு செய்தார். இதில் நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பிலுள்ள கட்சிக்காரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT