nn

மழைக்காக ஒதுங்கிய கல்லூரி மாணவர்கள் மீது பழைய வீட்டின் படிக்கட்டு சுவர்கள் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தாம்பரம் சேலையூர் அருகே தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் சேலையூர் ஏரிக்கரை தெருவில் உள்ள மைதானம் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென அந்த பகுதியில் மழை பெய்யத்தொடங்கியது. அக்கம் பக்கத்தில் பார்த்த மாணவர்கள் தூரத்தில் ஒருகட்டடம் இருப்பதைக் கண்டனர். அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் மழைக்காக ஒதுங்கத்திட்டமிட்டு ஆறு மாணவர்களும் படியின் அடிப்பகுதியில் சென்று அமர்ந்துள்ளனர்.

Advertisment

அப்பொழுது திடீரென அந்த பழைய கட்டடத்தின் படிக்கட்டுச் சுவர்கள் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் டிமோ மில்கி, ஜியோ பஃரி ஆகியோர் உயிரிழந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மழைக்கு ஒதுங்கிய இடத்தில் படிக்கட்டுகள் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.