Staff Passport Scheme - chennai Corporation Announcement

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுமத்திய அரசும், மாநில அரசுகளும்சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளைஅறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு தளர்வுகளைமாநில அரசு பட்டியலிட்டு இருந்தது. தற்போது சென்னையில் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், வீட்டுவேலை பணியாளர்கள் பாஸ் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், வரைமுறைகள்சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி http://tnepass.tnega.orgஎன்ற இணையத்தளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்களும் மேற்கண்ட இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும், ஐடி நிறுவனங்களும் http://tnepass.tnega.org என்ற இணையத்தளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம்.

சிறு குறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்கள் மற்றும் கிராமப்புற, தனி கடைகளுக்கு அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.