staff  misbehaved with young girl who went scan private hospital

சென்னை பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியரான வழுதிகம்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், இளம்பெண்ணைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளார். இதுகுறித்து அங்கு வாக்குவாதம் செய்த இளம் பெண் நடந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனை ஊழியரான ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.