Advertisment

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிற நிலையில் தமிழக அரசு பல்வேறுதளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை நாளை (பிப் 1ஆம் தேதி) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெகு நாட்களாக நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறாதநிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தூசடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.