/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72326.jpg)
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முறையற்ற தொடர்பு விவகாரத்தில் கத்திக்குத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை இந்திரா நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவியின் சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கெளசல்யா என்பவருடன் திருமணம் மீறிய முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் கௌசல்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனால் விக்னேஷ் மாமாவான கருப்புசாமிக்கும் கௌசல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கருப்புசாமியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த கருப்புசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)