/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_29.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், சத்யா தம்பதி. இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் வெற்றிவேல் மொத்தம் 206 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். தமிழ் பாடத்தில் 23 மதிப்பெண்கள் பெற்றது அவர் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த வெற்றிவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவனின் தாய், தந்தை இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். வெற்றிவேல் தனது பாட்டியுடன் தெங்கியாநத்தம் வீட்டில் இருந்தபடிபடித்து வந்துள்ளார்.தன்னம்பிக்கை குறைவே அவர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்துள்ளது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
அதே போல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ளசெம்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன், சுகுணா தம்பதி.இவர்களது மகன் செழியன் (வயது 16). நடராஜன் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்து அதன் மூலம் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் செழியன் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மொத்தம் 226 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். தேர்வு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முடிவு வெளிவருவதற்கு முதல் நாளே வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் தோல்வியில் அமையும் என்ற பயத்தில் தற்கொலைக்கு செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)