Advertisment

காவலர் வில்சன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? - தனிப்படை எஸ்.பி. விளக்கம்...!

கடந்த 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு களியக்காவிளை சந்தைவழி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையிலான 10 தனிப்படைகள், கியூ பிரிவு, உள்பாதுகாப்பு பிரிவு போலீஸார் கேரளா போலீஸாருடன் இணைந்து தேடிவந்தனா்.

Advertisment

ssi-wilson-incident-SB explanation

இந்தநிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம் முகத்தில் உள்ள தாடியை மழித்து விட்டும், தௌபீக் தலை முடியை முழுசா சிறியதாக வெட்டி விட்டும் மாறு வேடத்தில் கேரளா வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி சென்றனா். பின்னா் கா்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் இருவரையும் குமரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி குற்றவாளிகளை அதிகாலை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்த குமரி போலீஸ், அங்கு சாரியான பாதுகாப்புகள் இல்லாததால், பின்னர் குற்றவாளிகளை தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றியது. பின்னா் அவா்களிடம் நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார், அபினவ், தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத், புலன் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அரசு மருத்துவரை வரவழைத்து அப்துல்சமீம் மற்றும் தௌபீக்கை பரிசோதனை செய்த பின் இரவு 9 மணிக்கு குழித்துறை மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜா் படுத்திவிட்டு இரவு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். இருவரையும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

 ssi-wilson-incident-SB explanation

Advertisment

இந்த நிலையில் தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத் கூறும் போது, "தமிழகத்தில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டியிருந்த நிலையில் டெல்லி, பெங்களூரில் அடுத்தடுத்து 6 தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனா். இவா்கள் எல்லாம் அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கின் கூட்டாளிகள். இதனால் அவா்களின் சதிதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாம்.

அதை பழிதீா்த்து கொள்ளும் விதமாக தான் களியக்காவிளை சோதனை சாவடியில் வில்சனை சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை கைப்பற்ற வில்லை. போலீஸ் கஷ்டடியில் அவா்கள் இருவரையும் எடுக்க கேட்கபட்டுள்ளது. அதன்பிறகு இவா்களின் இயக்கத்தை பற்றியும் அவா்களின் பின்னால் இருப்பவா்கள் பற்றியும் தெரியவரும்" என்று தெரிவித்தார்.

police wilson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe