நாமக்கல் அருகே, காவல்துறை சிறப்பு எஸ்.ஐ.., ஒருவர், காவல்நிலையத்தில் பணி நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் அருகே உள்ளபொத்தனூரைச்சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 45).ஜேடர்பாளையம்காவல்நிலையத்தில் சிறப்புஎஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.தன்னுடைய வீட்டில் விசேஷம் இருப்பதாகக் கூறி, கடந்த 20 நாள்களாக விடுப்பில் சென்றிருந்தார். விடுப்பு முடிந்து, கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு மீண்டும் நீலகண்டன் பணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 16) வழக்கம்போல் பணிக்கு வந்த அவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வெளியே சென்றிருந்தார். பின்னர் மீண்டும் காவல்நிலையம் திரும்பிய அவர், திடீரென்று தான் கொண்டு வந்திருந்தவிஷத்தைக்குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.
விஷத்தைக் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர், நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.