Advertisment

எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் நீச்சல் போட்டி

SS Sports Village Swimming Competition

எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் குன்றத்தூரில் சென் மேரிஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய ரீஜனல் லெவல் மண்டல அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. அதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisment

போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ஆனந்தராஜா, சுக்கிரன் பவுண்டேஷன் சேர்மன், பேராசிரியர் முருகையன் பக்கிரிச்சாமி கல்வியாளர், எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் வில்லேஜின் சேர்மன் பி. சண்முகம் மற்றும் பத்திரிகையாளர் அரவிந்த் மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. அதில் அதிக மதிப்பெண் பெற்ற அணியான ஆர்.எம்.கே. இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல்வின்னர் ஆகவும், ரன்னராக எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் மற்றும் ஜெயா ஸ்போர்ட்ஸ் அகாடமி கோப்பைகளைத்தட்டிச் சென்றன.

Advertisment

sports
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe