Srivilliputhur Andal costumes worn for Namperuman

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஆண்டாள் கிளிமாலை, பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆண்டாளின் கிளிமாலையை ஸ்ரீ நம்பெருமாளுக்கு அணிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஆண்டாள் கிளிமாலை பட்டுவஸ்திரங்கள், மங்கலப் பொருட்கள் ஆகியவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன், தக்கார் ரவிச்சந்திரன், ரமேஷ் பட்டர் ஆகியோர் கொண்டு வந்து, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு இன்று (08.05.2021) பட்டு வஸ்திரம் நம்பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் விமரிசையாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.