Skip to main content

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிகழ்ச்சிக்கு தடை - பந்தல், மேடை அகற்றம்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
s


தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு  நடத்த இருந்த தியான நிகழ்ச்சிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  இதையடுத்து,  தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டன. தெற்கு பிரகாரத்தில் போடப்பட்டிருந்த பந்தல், மேடை அலங்காரம், தோரணங்கள், இருக்கைகள் போன்றவை அகற்றப்பட்டன.

 

பாரம்பரியமிக்க தஞ்சாவூர் கோவிலில் தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினால் கோவிலின் சிறப்பு பறிபோய்விடும்.  ஆகவே,  ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தியான நிகழ்ச்சி எனில் அதற்கு மண்டபங்களுக்கு சென்றிருக்கலாமே.  பாரம்பரிய கோவிலினுள் நடத்த வேண்டிய அவசியம் இல்லையே என்று கூறி கோவிலில் நிகழ்ச்சி  நடத்த அனுமதி மறுத்தனர்.  அங்கு நிகழ்ச்சி நடத்த இடைக்கால தடை விதித்து,   கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள், கூடாரங்கள் போன்றவை முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 10 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


 இதையடுத்து வாழும் கலை அமைப்பினர்,கோவில்  பிரகாரத்தில் அமைத்த பந்தல்களை அகற்றி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள காவேரி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். தியான நிகழ்ச்சியை அந்த மண்பத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 இந்த  இடைக்காலத்தடையை நிரந்தரமாக்க வேண்டும் என்று தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம் 

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Sri Sri Ravi Shankar helicopter made an emergency landing

 

சத்தியமங்கலம் மலைப் பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. 

 

பெங்களூருவிலிருந்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக சத்தியமங்கலம் கடம்பூரி மலைப்பகுதி உகினியம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அவசர அவரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வானிலை சரியான நிலையில் மீண்டும் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. 

 

 

Next Story

 “கோர்ட்.. கவர்மெண்ட்டால் முடியாது! ஆன்மிகவாதிகளால் முடியும்!” -‘வாவ்’ வாழும்கலை ரவிசங்கர்!  

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
r

 

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இன்று வந்தார். சாமி தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். சபரிமலைக்குப் பெண்கள் செல்வது,  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது,  பா.ஜ.க. ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு என்பது போன்ற விவகாரமான கேள்விகளை எதிர்கொண்டு, அவர் முன்வைத்த கருத்துக்கள் இதோ - 

“அதுவந்து பரம்பரையா வச்சிக்கிட்டிருக்கிற வழக்கத்தை காப்பாத்திட்டு வரணும். அதுவந்து புரட்சிக்கான இடம் இல்ல. ஆன்மிக இடம். பக்தர்கள் யாரும் அங்கே போகணும்னு நினைக்கல. அதிகாரமா.. பக்தர்கள் இல்லாத பெண்கள் அங்கே சாதிக்கணும்னு போறாங்க. அதனால.. நிறைய பேருக்கு மனசுல துன்பம் உண்டாயிருக்கு. யாரு மனசயும் துன்பப்படுத்தக் கூடாது. நிச்சயமா சுப்ரீம் கோர்ட் இதை கவனத்துல வச்சிக்கிட்டு பண்ணுவாங்க. அப்பீல் வந்து அக்செப்ட் பண்ணுவாங்கன்னு எனக்குத் தோணுது. 

 

r

 

பெண்களுக்கு நிஜமாவே பக்தி இருந்ததுன்னா அந்த இடத்துல என்ன கலாச்சாரம் இருக்கோ.. அதைக் காப்பாத்திட்டு வாங்கன்னு அவங்களுக்குச் சொல்லுவேன். இப்ப பாருங்க. சர்ச்ல எல்லாம் ஆண்கள்தான் பாதிரியாரா இருக்காங்க. அங்கே போயி.. நான் லேடி பிஷப் ஆவேன்னு வைக்க முடியுமா? ஆனா.. அது யாரு பண்ண முடியும்? கோர்ட்டோ, கவர்மென்டோ பண்ண முடியாது. ஆன்மிகவாதிகள்தான் பண்ண முடியும். 
அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பேச்சுவார்த்தைகளால்தான் முடியும்னு நான் நினைக்கிறேன். ரெண்டு சமுதாயமும் சேர்ந்து, ஒற்றுமையா ராமர் கோவில் கட்டணும்கிறதுதான் என்னோட கொள்கை. அப்படியாகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

 

வரக்கூடிய அரசு பார்க்கலாம். இன்னும் நாலு மாசம் இருக்கே..  அஞ்சுமாசம் இருக்கே.. அப்ப பார்க்கலாம். நாட்டுல சில நல்லது நடந்திருக்கு. இன்னும் நடக்க வேண்டியது நெறய இருக்கு. இன்னும் முழுதுமா முடியல. 

 

ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. அரசியல் செய்கிறதா?  இந்தக் கேள்வியை  நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும்.” என்று சிரித்தார் ரவிசங்கர்.