ADVERTISEMENT

கோடாங்கிபட்டி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு - தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

08:22 PM Aug 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழனிசெட்டிபட்டி பகுதியில் விவசாய பாசனத்திற்கு செல்லும் நீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும், என கோரிய வழக்கு மீதான விசாரணையில் தேனி மாவட்ட ஆட்சியர், பொதுபணித்துறையின் நீர் ஆதாரம் செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு .

ADVERTISEMENT


தேனி அருகே உள்ள பழனிசெட்டி பட்டி பகுதியை சேர்ந்த கே.கலையரசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்ங செய்த மனுவில்,

"தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் தனியாருக்கு சொந்தமாக ஒரு டெக்ஸ்டைல் மில் உள்ளது. இந்த மில் வளாகத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எனும் சுற்று சுவர் எழுப்பி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் 1.49 ஏக்கர் நீர் வழி தடம் ஆக்கிரமிக்கப்பட்டு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது.

இதனால் கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாசன நீர் தடைபடுகிறது. நீர் வழி தடங்களை ஆக்கிரமிக்க கூடாது என தமிழ்நாடு குளம், கால்வாய் களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2007 தெளிவாக கூறுகிறது.

கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழநிசெட்டிபட்டி கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள், M,Mசுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், பொதுபணித்துறையின் நீர் ஆதாரம் செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விணாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT