ஸ்ரீரங்கம் கோவில் ஸ்ரீரங்கராமானுஜ ஜீயர் சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .
இதற்கு முன்பாக 2016ல் ஒரு முறை அவரை இதே அப்பலோவில் கிணற்றில் தடுமாறி விழுந்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார். அதன் பிறகு மீண்டும் சிறிது மூச்சு திணறல் இருக்கிறது பயப்படும்படி இல்லை என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள் ஆனாலும் நேற்று மதியம் இறந்தார்.
அவரின் சமாதி, அந்திம கிரியைகள் இன்று ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பஞ்சக்கரை சாலையில் உள்ள இடத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த நேரத்தில் அதே அப்பல்லோ மருத்துவமனையியில் ஜீயரின் மகனும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.