Srirangam temple ... Charitable Department announcement!

ஸ்ரீரங்கம் கோவிலில் 51வது ஜீயர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று அறநிலையத்துறை இன்று அறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisment

108 வைணவத் தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற முக்கியமான ஸ்தலமாக விளங்கும் இந்த ஸ்ரீரங்கத்தில் 50வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

Advertisment

இந்நிலையில் காலியாக உள்ள அந்த இடத்தை நிரப்ப தற்போது அறநிலையத் துறை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் ,இந்து மத தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்த, சந்நியாசம் பெற்ற, கோயில் ஆகமங்களையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 51வது ஜீயருக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வருகின்ற ஜூன் மாதம் எட்டாம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment