Srirangam Ranganathar Temple; Vaikunda Ekadasi Festival

Advertisment

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நம்பெருமாள் தங்கக் கிளி, முத்து சாய் கொண்டையுடன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. பகல் பத்து வைபவத்தின் 2ஆம் நாளான இன்று நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தங்கக் கிளி, முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் புறப்பட்டு 7.00 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு நம்பெருமாளை வழிப்பட்டனர். இதனையடுத்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.