Advertisment

நகர்த்தப்பட்ட அனுமன் சிலை; ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு

srirangam ranganathar temple hanuman statue incident 

Advertisment

திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இக்கோவிலில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஶ்ரீரங்கம் கோயில் உள்ளே கொடிமரம் முன்பு இருந்த அனுமன் சிலையை நான்கு அடி தூரம் நகர்த்திவைத்துள்ளனர். அந்த சிலை 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்தது. தற்போது கொரோனா காலத்தில் அதனை நகர்த்தி வைத்துள்ளதாகவும், மீண்டும் அதே இடத்தில் அனுமன் சிலையை வைக்க வேண்டும். மேலும் ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பராமரிப்பு என்ற பெயரில் சிதிலம் செய்துள்ளனர். அதனை பழையபடி சீரமைக்க வேண்டும் எனவும்வலியுறுத்தி ஸ்ரீராமானுஜர் திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலில் ஆரியபட்டால் வாசலில் உள்ள தங்கக்கொடி கொடிமரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திவ்யா, ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாதன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

hanuman police statue temple trichy
இதையும் படியுங்கள்
Subscribe