ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு -தனிமைபடுத்தும் முகாமுக்கு ஸ்ரீரங்கவாசிகள் எதிர்ப்பு!

08:50 PM Jun 23, 2020 | rajavel

ADVERTISEMENT


திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மூலத்தோப்பு என்கிற இடத்தில் கரோனோ பாதிப்பு ஏற்பட்டு அங்கிருந்து இதுவரை 5 பேருக்கு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் உள்ள ராஜன் மாநகராட்சி பள்ளியில் கரோனொ நோயாளிகளை கொண்டு வருவதற்கான மாநகராட்சி அதிகாரிகளை வைத்த சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT


இது குறித்து அந்த பகுதி மக்களிடம் பேசியபோது, ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் 200 வீடுகள் உள்ளன. 10,000 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இங்கு தற்போது இந்த பள்ளியில் 400 கரோனோ நோயாளிகளை கொண்டு வந்து தனிமைப்படுத்துவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கனவே கரோனோ பரவி வரும் இந்த நிலையில் அருகே தனிமைபடுத்தும் மையத்தை ஏற்படுத்தினால் எப்படி சரியாக இருக்கும்.


ஸ்ரீரங்கம் மேலூர் மூலத்தோப்பு பகுதியில் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது கரோனா வந்த வீட்டின் முன்பு பெயருக்கு பேரிகாட் வைத்து அதன் சுற்றி கட்டைகளை மட்டுமே வைத்துள்ளனா். இப்பகுதியில் கரோனா வந்துள்ளது என அங்கு வசிக்கும் மக்களுக்கே தெரியவில்லை. ஆகையால் முதலில் தண்டோரா மூலமாகவோ அல்லது மைக் மூலகாகவோ உஷார் அறிவுப்புகளை அறிவிக்க வேண்டும்.


மூலத்தோப்பு பகுதி முழுவதும் பேரிகாட் வைத்து சீல் வைக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பாஸ் கொடுத்து வேலைக்கு செல்ல மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வர அறிவுறுத்த வேண்டும். மேலும் அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வருமுன் காப்பதே காலச்சிறந்தது. சென்னையை போன்று திருச்சியும் உருவாகாமல் இருக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


இதற்கு இடையில் ராஜன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஐய்யனார் உயர்நிலைபள்ளியில் கரோனோ வார்டு தனிமைபடுத்தும் முகாம்களை ஏற்படுத்தி வருகிறார்கள் ஸ்ரீரங்கம் மாநகராட்சி அதிகாரிகள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT