Advertisment

மழைநீரில் உற்சாக குளியல் போட்ட ஸ்ரீரங்கம் யானைகள்!

Srirangam elephants bathe enthusiastically in rainwater!

நேற்று தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்தது. அதேபோல் இன்றும் 20 மாவட்டங்களில் மழை நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நேற்று திருச்சியின்பல இடங்களில் பரவலாக மழை பொழிந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் ஆண்டாள்-லட்சுமி ஆகியவை மழையில் உற்சாக குளியல் போட்டது. ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் இருந்து கொட்டிய மழை நீரில் இரண்டு யானைகளும் விளையாடின. தும்பிக்கையால் மழை நீரை பிடித்து உடல் முழுவதும் பீச்சி அடித்து இரண்டு யானைகளும் விளையாடின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை ஏற்கனவே குறும்புத்தனத்திற்கு பெயர் போனது. அண்மையில் சாலையில் நடந்து செல்கையில் பாகனின் பேச்சுக்கு ஆண்டாள் யானை பதிலளிப்பது போல் சமிக்கை ஒலியினை எழுப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

elephant rain sri rangam video
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe