கோயில் யானை ஒன்று பாகனின்பேச்சுக்கு 'ம்ம்...' என சமிக்ஞைசெய்வதுபோல் ஒலி எழுப்பும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
36 ஆண்டுகளாகஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 'ஆண்டாள்' எனும் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.சாலையில் நடந்து செல்லும் பொழுது, பாகனான ராஜேஷின்பேச்சுக்குப் பதில் அளிப்பது போல், சத்தமிட்டுச் செல்லும் இந்த ஆண்டாள் யானை,காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.சாலையில் செல்லும் பொழுது 'போகலாமா' என்பது போன்ற கேள்விகளுக்கு 'ம்ம்..'எனப் பேசும் தொனியில், சமிக்ஞை ஒலி எழுப்புகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.