Skip to main content

சினிமா துறையினருக்கு எதற்கு அரசியல்... ஸ்ரீபிரியா பேச்சு

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
Sripriya


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வகுத்த வழியில்தான் அனைவரும் பாடுபடுவது. புதன்கிழமை சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

அப்போது பேசிய அவர், 

சினிமா துறையினருக்கு எதற்கு அரசியல் என்று கேட்கிறார்கள். சினிமாக்காரர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடாதா? மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா?. இந்தக் கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை.

 

 



பல்வேறு கட்சிகளில் ஒருசிலர் வீரவசனம் பேசுவார்கள். செயல்பாடுகள் இருக்காது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விரைவில் தேர்தல் வரப்போகிறது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தினை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். இவ்வாறு கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? தவறா?..." - ஸ்ரீப்ரியா ஆதங்கம்!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

vgsbsdbs

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

 

ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை பேச்சாளருமான ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்... இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? அல்லது தவறா? என்று குழந்தைக்குத் தெரியாதபோது, அது பாதிக்கப்படக்கூடிய பெண் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக பெண்கள், ஏதோவொரு விதத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். எனவே ஆசிரியரிடமிருந்து இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

இப்ப எதுக்கு வந்தீங்க? ஸ்ரீபிரியாவிடம் கேள்வி எழுப்பிய மக்கள்..! (படங்கள்)

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா, அத்தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சென்னை சிட்டி சென்டர் எதிரில் வாக்கு சேகரித்த ஸ்ரீபிரியாவிடம், “கரோனா காலத்துல சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தோம். அப்பல்லாம் வராம இப்ப எதுக்கு வந்தீங்க?” என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.