Skip to main content

ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறப்பு!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Sriperumbudur Foxconn plant reopens

 

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 25 நாட்களாக மூடப்பட்டிருந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இன்று (12/01/2022) திறக்கப்பட்டுள்ளது. எனினும், பொங்கல் விடுமுறைக்கு பிறகே ஆலையில் முழு வீச்சில் உற்பத்தித் தொடங்கும் நிலை உள்ளது. 

 

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி, அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில், ஆலை நிர்வாகத்துடன் அரசின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. 

 

அப்போது அரசு தரப்பு கூறிய ஆலோசனைகளின் படி, பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதாக ஆலை நிர்வாகம் உறுதி அளித்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி, ஆலை இன்று (12/01/2022) திறக்கப்பட்ட நிலையில், சுமார் 300 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் வழக்கமான உற்பத்தி நடைபெறவில்லை. 

 

பொங்கல் காரணமாகவும், கரோனா பிரச்சனை காரணமாகவும் பலர் பணிக்கு வரவில்லை எனவும், பொங்கல் விடுமுறைக்கு பின்பே உற்பத்தி முழு வீச்சில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. 

 

இதற்கிடையில், கடந்த மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.