Advertisment

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்! (படங்கள்) 

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் இன்று (16/04/2022) நடைபெற்றது.

Advertisment

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத் திடலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் இன்று (16/04/2022) மாலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த திருக்கல்யாணத்திற்காக, திருமலை திருப்பதியில் உற்சவர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 40 பட்டாச்சார்யார்கள், 100 வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதினர்.

Advertisment

திருமலை திருப்பதி கோயில் போன்று திருக்கல்யாண மேடை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கருவறையைப் பிரதிபலிக்கும் வண்ணம் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் நடைபெற்ற தீவுத்திடல் பகுதி வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, தீவுத்திடலில் உள்ள சாலைகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்துக் கொள்ளும் வகையில், சென்னை மாநகரில் இருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் மூன்றாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 15 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

திருக்கல்யாண வைபவத்தில் கலந்துக் கொண்ட பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Chennai Devotees temple tirupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe