Advertisment

"இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை"- அம்மா நாளேடில் செய்தி!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார்.

Advertisment

 SriLankanTamils-AmitShah-EPS

இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என்று கூறி நாடு முழுவதும் போராட்டாங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த மோசாதாவிற்கு ஆதரவளித்து ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லாம் மக்களுக்கும் அதிமுக அரசு துரோகம் செய்து விட்டதாக தமிழக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியாகியுள்ளது.

amithshah edappadi pazhaniswamy srilanka
இதையும் படியுங்கள்
Subscribe