“பழ. நெடுமாறன் கூறியது உண்மையில்லை” - இலங்கை ராணுவம் மறுப்பு

srilankan army said  pazha Nedumaran statement is not true

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கொன்றதாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்களும் வெளியாகின. அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் பேசிய அவர், “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார். பிரபாகரன் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருப்பதால் அவர்கள் அனுமதியுடன் தான் இதை கூறுகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளிப்படுவார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று கூற முடியாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலில் உண்மையில்லை என்று பழ.நெடுமாறன் கூறிய தகவலுக்கு இலங்கை ராணுவம்மறுப்பு தெரிவித்துள்ளது.

srilanka
இதையும் படியுங்கள்
Subscribe