Advertisment

நவம்பர் 16ல் ராஜபக்சே தலைமையில் இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர்

sr

Advertisment

வருகின்ற நவம்பர் மாதம் 16ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இலங்கையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கவுள்ளதாக அறிக்கையின் மூலம் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமராக நேற்று மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை புத்த பிக்குகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்நிலையில் கொழும்பு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அவர் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அதிகாலை முதல் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்தப் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற மரபுகளுக்கு அமையவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தாமே தொடர்ந்தும் பிரதமராகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

sri

Advertisment

அரசியலமைப்பிற்கு அமைவாக தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் தமக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக எவரேனும் பதவியேற்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து இன்று ஜனாதிபதியின் உரையை அடுத்து பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூடும் என, இந்த அறிவிப்பு வெளியானதன் பின்னர் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் பின்னணியில் ஜனாதிபதியால் இந்தப் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

makinda rajapaksa srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe