இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 35 பேர் போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனா வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

s

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதி இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் போது சில இடங்களில் வன்முறைச்சம்பவங்கள் நடந்து பதட்டத்தை ஏற்படுத்தின. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றுள்ளது.

srilanka
இதையும் படியுங்கள்
Subscribe