Published on 25/01/2023 | Edited on 25/01/2023

சத்தியமங்கலம் மலைப் பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிலிருந்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக சத்தியமங்கலம் கடம்பூரி மலைப்பகுதி உகினியம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அவசர அவரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வானிலை சரியான நிலையில் மீண்டும் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.