Advertisment

கரோனாவால் தடைப்பட்டுப் போன கோயில் திருவிழாக்கள்

நாகூர் தர்க்கா, வேளாங்கண்ணி மாதா ஆலயம், சிக்கல் சிங்காரவேலன் கோவிலைப்போலவே நாகையில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்துவரும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா விவகாரத்தால் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

kovil

உலகையே ஆட்டம் கானவைத்துள்ளகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தக் கூடாது எனத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Advertisment

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த எல்லையம்மன் பாலாபிஷேகம், வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த மாரியம்மன் பாலாபிஷேகம், மே 1-ம் தேதி நடைபெற இருந்த பூச்சொரிதல், 2-ம் தேதி நடைபெறுவதாக இருந்த சித்திரைத் திருவிழா கொடியேற்றம் மே 10-ம் தேதி நடைபெற இருந்த திருத்தேர், செடில் உற்சவம் உள்ளிட்ட அனைத்து சித்திரை மாதத் திருவிழா நிகழ்ச்சிகளும் அரசின் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்துள்ளனர்.

http://onelink.to/nknapp

இதுபோல் பங்குனி, சித்தரை ஆகிய மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும், ஆனால் இந்த ஆண்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் திருவிழாக்களைப்போலவே அனைத்து விழாக்களும் தடைபட்டுப்போனது.

kovil corona virus Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe