'Sri Lanka's tyranny should not be allowed anymore'-pmk Ramadoss condemned

Advertisment

'தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி தண்டம் விதித்து எல்லைமீறும் இலங்கை அரசின் அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது' என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர்ஏற்கனவே ஒரு முறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி தண்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும்மீண்டும் தண்டம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

'Sri Lanka's tyranny should not be allowed anymore'-pmk Ramadoss condemned

Advertisment

நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு இவ்வாறு செய்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக் கூடாது.தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.