Sri Lankan Tamils ​​struggle in Trichy jail

திருச்சி முகாம் சிறையில் 6 இலங்கைத்தமிழர்கள் விடுதலை செய்யக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Advertisment

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை, ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை அகதிகள் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்கள் மீது எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.

Advertisment

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து தண்டனையை அனுபவித்து வெளியேறுவோம். ஆனால் எங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 3 ஆண்டுகளாக இங்கேயே இருந்து வருகிறோம். எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி 6 இலங்கை தமிழர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர். இலங்கைத்தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.