
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள இலங்கை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவந்தனர். 3 வார காலத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தும் விடுதலைக்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், நிரூபன், முகுந்தன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (18.08.2021) கத்தியால் தங்களது கழுத்து மற்றும் வயிற்றைக் கிழித்துக்கொண்டனர். மேலும், 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றனர். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரையும் மருத்துவக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டனர். அதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Follow Us