திருச்சி சிறப்பு முகாம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 19வது நாளாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
இவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை காலம் முடிந்தும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்திவருகின்றனர். "நாங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளனர்.