Advertisment

சிறையில் மரக்கன்றுகள் வளர்த்து கல்லூரிகளுக்குத் தந்த இலங்கைத் தமிழர்!

Sri Lankan Tamil who grew saplings in jail and gave them to colleges!

Advertisment

திருச்சி மத்தியச் சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் மகேந்திரன் என்பவர் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000ற்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் ‘தண்ணீர் அமைப்பு’ எனும் தொண்டு அமைப்பிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் கொட்டப்பட்டு முகாம் துணை சார்பு ஆட்சியர் ஜமுனாராணி, கண்டோன்மென்ட் துணை ஆணையர் பாஸ்கரன், வருவாய்த்துறை ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை தண்ணீர் அமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். தண்ணீர் அமைப்பின் சார்பில் செயல்தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் அர்.கே.ராஜா, மற்றும் கலைக் காவிரி கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற உறுப்பினர்கள் ஹரிஹரதாஸ், சதீஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புங்கன், பாதாம், அத்தி, மா, புளியமரம், கொய்யா, வேம்பு ஆகிய கன்றுகளை வழங்கிய மகேந்திரனை தண்ணீர் அமைப்பின் சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மரக்கன்றுகளை கல்லூரி, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என தண்ணீர் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe