கரூர் குளித்தலை அருகே உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி கிராமம். இங்கு இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது.
மறுவாழ்வுமுகாமில்கடந்த 29ம் தேதி பெண் ஒருவர் தனியே அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த போது வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து பெண்ணிடம் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றதாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் அவரை மீட்டனர். புகாரின் பேரில் அன்புராஜ் குளித்தலை அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.