Sri Lankan Tamil person passes away in camp jail

Advertisment

திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முகாம் சிறையில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வழக்குகள் முடிவடைந்த நிலையிலும் தொடர்ந்து தாங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துவருவதாகவும் எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில், முகாம் சிறையில் இருந்த இலங்கைத் தமிழரான முஹம்மது அலி என்பவர் கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்பு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டதிலிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (25.06.2021) உயிரிழந்ததையடுத்து முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்தனர்.