Advertisment

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Sri Lankan Navy attacks Pudukottai fishermen

மத்திய-மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சார்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சேது, தேவராஜ், மகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் விசைப்படையின் மீது மோதி சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களையும் கடலில் வீசியுள்ளனர். படகைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். படகும் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில் தொடர்ந்து அத்துமீறும் கடற்படை மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment
fisherman Pudukottai Sri Lanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe