தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

Sri Lankan Navy arrests 22 Tamil Nadu fishermen

தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து, மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. கைதானவர்களில் 9 பேர் நாகை மற்றும் 13 பேர் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 நாட்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 21 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Fishermen navy
இதையும் படியுங்கள்
Subscribe