ADVERTISEMENT

எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை சிங்கள மீனவர்கள் கைது!!

06:38 PM Feb 19, 2019 | selvakumar

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25,பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்தி 5 படகுகளையும் இந்திய கடலோர காவல்படையினர் கைபற்றி இலங்கை மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை - கோடியக்கரை கடற்பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுருந்தனர். அப்போது தோப்புத்துறை அருகே 45 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை கண்ட இந்திய கடலோர காவல்படையினர் , அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் இலங்கை மத்தாரா, கேளோ, திரிகோணமலை பகுதிகளை சேர்ந்த வக்கமாலித், நிமேஷ் , சத்ரங்கா, குமாரா, நிஷாந்தா, மன்பந்து ஆகிய 25 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது 5 படகையும் இன்று காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டுவந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இலங்கை மீனவர்கள் 25 பேரும் பிப்ரவரி 17,ஆம் தேதி திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாகவும், இந்திய கடல் பகுதியில் கேரை மீன் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT