Advertisment

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று 8 இடங்களில் நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பற்றுள்ளது.

Advertisment

இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 310 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான 'அமாக்' நிறுவனம் வாயிலாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு உலக நாடுகள் வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் இன்று மாலை சென்னை பெசன் நகர் கடற்கரையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி இலங்கையில் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.