புதுச்சேரில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை கொண்டுசெல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று 8 இடங்களில் நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பற்றுள்ளது.

PUDUVAI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதுவரை 310 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான 'அமாக்' நிறுவனம் வாயிலாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய அடையாள அட்டையுடன் மீன் பிடிக்க செல்லவேண்டும் என புதுவை மீன்வளத்துறை அறிவித்துள்ளது.அதேபோல் படகு உரிமம், மீனவர் உரிமம் இல்லாமல் கடலுக்கு செல்லக்கூடாது. சந்தேகத்திற்கிடமாக நபர்கள், பொருட்கள் தென்பட்டால் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.