போதைப்பொருள் கடத்தல் தளமாகும் தூத்துக்குடி! இலங்கை கடத்தல் ஏஜெண்ட் கைது! 

 Sri Lankan abduction agent arrested

இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்குப் போதைப் பொருட்கள் கடத்துகிற முகத்துவாரமாக மாறி வருகிறது தூத்துக்குடி கடல் பகுதி. கடந்த வாரம், உலகச் சந்தையில் 30 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் எனும் போதைப்பொருள் 10 கிலோ பிடிபட்டது. தற்போது உள்ளூர் மார்க்கெட்டில் ஒரு கோடி மதிப்புள்ள சுமார் 450 கிலோவுக்கும் மேலான அரை டன் கஞ்சா கடத்தலுக்காகக் காத்திருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.

 Sri Lankan abduction agent arrested

தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா, தனக்குக் கிடைத்த உளவுத் தகவலைக் கொண்டு தனது சகாக்களான எஸ்.ஐ.வேல்ராஜ், ஜீவமணி உள்ளிட்ட போலீஸ் படையுடன் தூத்துக்குடியின் தாளமுத்து கடற்கரையோரம் கண்காணிப்பைத் தீவிரமாக்கினார். அங்குள்ள வெள்ளப்பட்டி கடற்கரையை நோட்டமிட்டவர்கள், படகில் ஏற்றுவதற்குத் தயாராகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சைவையும், படகையும் கைப்பற்றினார்கள். அதனைச் சோதனை செய்ததில் 450 கிலோவுக்கும் மேலான எடை கொண்டது எனவும், அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு கோடியையும் தாண்டும் என்கிறார்கள்.

படகு மூலம் கடத்திச் செல்வதற்குத் தயாராக இருந்த கணேசன் மாரிகுமார், பன்னீர்செல்வம், யோகேஸ்வரன், இசக்கிமுத்து, வினீத் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் தாலுகாவின் புவனகிரியைச் சேர்ந்த மன்சூர்அலி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

 Sri Lankan abduction agent arrested

பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சென்னையிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட இந்தக் கஞ்சா மூட்டைகள், தூத்துக்குடிப் பகுதியில் தண்ணீர் புகுந்து கெட்டு விடாமலிருக்க பிளாஸ்டிக் மூலம் கவனமாகப் பேக்கிங் செய்யப்பட்டுக் கடத்தலுக்குத் தயாராக இருந்திருக்கிறது. இதனை பிடிபட்ட கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்காக இதன் முகவரான மன்சூர்அலி, உடன் வந்திருக்கிறார். முறையாக இவை கடத்தப்படுகிறதா?. தரப்பட்ட கஞ்சாவின் அளவு குறையாமல் இலங்கை கடத்தல் புள்ளியிடம் ஒப்படைக்கப்படுகிறதா, என்பதையும் கண்காணிக்கிற முகவர் மன்சூர் அலி, மேலும் இந்தக் கஞ்சாவை வேறு புள்ளிகள் யாரும் திருடி விடக் கூடாது என்றும் கண்காணிக்கப்பதுண்டாம்.

பிடிபட்ட குற்றவாளிகள், வாகனங்கள், கஞ்சா ஆகியவைகளை மேல் நடவடிக்கைக்காகப் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

கரோனாதொற்று காரணமாக இலங்கையில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இந்தியச் சரக்குகளுக்கு அங்கு 10 மடங்கு விலை கிடைப்பதால் விரளி மஞ்சள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், கடல் அட்டை இவற்றோடு போதைப் பொருட்களும் இங்குள்ளவர்களால் கடத்தப்படுகிறது. பிடிபட்ட கடத்தல் சரக்கு முகவர் மன்சூர்அலி இலங்கையைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் சிவா என்பவனின் நெருக்கமான முகவர். இருவரும் 10 ஆண்டுகட்கு முன்பு பிடிபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளதால் சிவாவிற்காக கடத்தலை மேற்கொண்டிருக்கிறான் மன்சூர்அலி என்கின்றனர். க்யூ பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரிகள்.

Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe