airport

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருச்சி விமான நிலையத்தை சமீபத்தில் சர்வதேச விமானநிலையமாக மாற்றுவதற்காக திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏர்இந்தியா விமானம் விமானநிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு வானில் பறந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இன்று காலை கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தனர். 9.25 மணிக்கு அந்த விமானம் தரையிறங்க வேண்டும். விமானம் வந்தபோது வானிலை மோசமாக இருந்தது. பைலட்க்கு ஓடுதளம் சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. இன்று காலையில் இருந்தே தொடர் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

இருப்பினும் விமானி விமானத்தை தரையிறக்கினார். அப்போது விமானம் ஒரே பக்கமாக சாய்ந்தபடி இறங்கியது. இதனால் விமானத்தின் இடது இறக்கை தரையில் உரசியபடி விமானம் தாழ்வாக சென்றது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இதையடுத்து சுதாரித்த பைலட் விமானத்தை மேலே எழுப்பினார். இதையடுத்து மீண்டும் கொழும்புக்கு விமானம் திரும்பிச் சென்றது. இதையடுத்து வானிலை சீரானதையடுத்து காலை 11 மணிக்கு மீண்டும் அந்த விமானம் திருச்சிக்கு வந்து பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.

தரையிறங்கும் போது நேர்ந்த இந்த ரோட்டை உரசி சென்ற சம்பவம் மீண்டும் விமான பயணத்தை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.