/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_195.jpg)
நாகை மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் திரிகோண மலையில் வைத்து, ஒரு படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், அந்தப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் இதேபோன்று கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது மேலும் 10 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில்அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)